புதன், 13 ஜனவரி, 2010

சிக்குன்குனியா அறிவீர்!

சிக்குன்குனியா என்றால் என்ன?

சிக்குன்குனியா ஒரு வைரஸ் நோயாகும். நோய் தொற்றுக்கு ஆளான, பகலில் கடிக்கும் மஞ்சள் காய்ச்சல் கொசுக்கள் (Aedes Aegypti) கடிப்பதால் மனிதர்களுக்கு பரவக்கூடியது. சிக்குன்குனியா வைரஸ் (CHIKV) முதன் முதலில் 1952-ம் வருடம் தான்ஸானியா நாட்டில் காய்ச்சல் கண்ட நோயாளி ஒருவரின் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. அதுமுதல் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும் ஆசியாவின் பல பகுதிகளிலும் பெரும்பகுதி மக்களைத் திரும்பத்திரும்பத்; தாக்கியதில் சிக்குன்குனியா ஒரு கொள்ளை நோயாக அடையாளம் காணப்பட்டது. கிட்டத்தட்ட ஆப்பிரிக்கா முழுவதும் சுற்றிச்சுற்றி வரும் இந்த வைரஸ் பெரும்பாலும் கொசுக்களுக்கும் குரங்குகளுக்கும் இடையில் ஏற்படும் தொற்றினாலேயே பரவுவதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இதற்குமுன் 1963, 1965 மற்றும் 1973-ம் ஆண்டுகளில் தாக்கியது.

வைரஸ் தொற்று ஏற்பட்டு 2 முதல் 12 நாட்களில் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சில சமயங்களில் வைரஸ் தொற்று உடல்நலக்குறைவாக மாறாமல் அமைதியாக உடலில் தங்கியிருப்பதும் உண்டு. இவ்வாறு ஏன் நிகழ்கிறது என்பது இதுவரை அறியப்படவில்லை. இவை அனைத்தும் மருத்துவ ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள்.

சிக்குன்குனியா குறிகள்

காய்ச்சல், மூட்டுகளில் கடுமையான வலி, வீக்கம், பிடிப்பு, தசைகளில் வலி, தலைவலி, பலவீனம், குமட்டல், வாந்தி, அரிப்பு ஆகியவை சிக்குன்குனியா குறிகளாக உள்ளன.

காய்ச்சல் ஓரிரு நாட்களிலேயே சரியாகி விடுகிறது. மூட்டுவலி, பலவீனம் ஆகியவை வாரக்கணக்கில், மாதக்கணக்கில் நீடிக்கிறது. ஆண்டுக்கணக்கில் மூட்டுவலியுடன் அவதிப்படுவோரும் உண்டு.

சிகிச்சைகள்

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தில் சிக்குன்குனியாவுக்கென குறிப்பிட்ட மருந்துகள் எதுவுமில்லை. சிக்குன்குனியா வைரஸ் எதிர்ப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆன்டிபயாடிக் மருந்துகள், பெயின் கில்லர்கள் தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிக்கவல்லவை.

சிக்குன்குனியாவுக்கு ஹோமியோபதி

சிக்குன்குனியா உட்பட அனைத்து வைரஸ் காய்ச்சல்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளவும் நலம் பெறவும் ஹோமியோபதி மருந்துகள் பெருமளவில் பயன்படுகின்றன. இது உலகளாவிய அளவில் கடந்த இரு நூற்றாண்டுகளாக தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலுக்கு ஹோமியோபதி மருந்தை தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்ததும், வைரஸ் காய்ச்சல்களுக்கு ஹோமியோபதியில் மருந்துண்டு என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருப்பதுவும் அண்மைச் செய்திகள். நூற்றுக்கணக்கானோர் வைரஸ் காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியாவின் பின் விளைவுகளுக்கு சிகிச்சை பெற்று 100% முழுநலம் பெற்றுள்ளது எங்கள் மருத்துவமனையின் பெருமைக்குரிய அனுபவமும் சாதனையும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக